ராமேஸ்வரம்-படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களை சக மீனவர்கள்: பாதுகாப்பாக காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த சக மீனவர்கள்!
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீன் பிடி விசைப்படகு ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக படகு நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த ஏழு மீனவர்கள் பேர் மற்றொரு படகில் ஏறி பத்திரமாக கரை திரும்பினர்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 13-12-2024 சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.இதில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி விசைப்படகு நடுக்கடலில் விசைப்படகின் பின்புறம் உள்ள மரப்பலகையில் உடைப்பு ஏற்பட்டு கடல் நீர் மளமளவென படகிற்குள் புகுந்ததில் படகு நடுக்கடலில் மூழ்கியது.
இதனால் படகில் இருந்த ஆறுமுகம், குமார், சேதுபதி, முருகன், மாதவன் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதனையடுத்து நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிப்பதை கண்ட அவ்வழியாக வந்த சக மீனவர்கள் மீனவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிகழ்வு ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் மூழ்கிய விசைப்படகினை இன்று இன்று கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக