Breaking News

இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து 24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது !

  • Share on

தூத்துக்குடியில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து 24 லட்சம் மோசடி செய்த இருவர்  கைது ! - சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.


தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி xs Markets என்ற இணையதளத்தில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூபாய் 24,64,800/- பணத்தை வங்கிக் கணக்குகளில் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த காட்டுராஜா மகன் விவேக்ராஜா (33) மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவகன் மகன் பரேஷ்குமார் (30) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 3 லட்சம் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத் தந்து மேலும் தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

காணவில்லை! காணவில்லை ! வட்டார போக்குவரத்து ஆய்வாளரை காணவில்லை?: விளாத்திகுளம் நகர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மின்னல் வேகத்தில் இயக்கப்படும் டிராக்டர் வாகனங்கள்!

  • Share on

Trending News