Breaking News

சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 18 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை!

  • Share on

சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 18 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் காளிபராசக்தி வசித்த பீடத்தில் ஆனி மாத வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா மகாயாகம்   நடைபெற்றது.வேள்வி விழா மகாயாக சாலையில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பழ வகைகள்,உணவு தானியங்கள், உடைகள்,குழந்தை தொட்டில், கல்உரல், அம்மி,மாங்கல்யம், உணவு ஆகியவற்றை நடைபெற்ற மகாயாக சாலையில் செலுத்தி வழிபாடு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 42 அடி உயரம் கொண்ட வெட்காளியம்மனுக்கு  108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 18 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  

ஆனி மாத இருமுடி விழாவிற்கு வருட வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், இன்று 3-வது கட்டமாக கோவை,திருப்பூர், ஈரோடு,நீலகிரி,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விரதம் இருந்து காப்பு கட்டி இருமுடி கட்டி வந்த பக்தர்கள் பம்பை வாத்தியத்துடன்  தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்!

யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் முதலாவது ஆண்டு திருக்குட நன்னீராட்டு விழா!

  • Share on

Trending News