Breaking News

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனிமாத மகா வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா: பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள்!

  • Share on

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனிமாத மகா வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா: பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் காளிபராசக்தி வசித்த பீடத்தில் ஆனி மாத வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா மகாயாகம்   நடைபெற்றது.வேள்வி விழா மகாயாக சாலையில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பழ வகைகள்,உணவு தானியங்கள், உடைகள்,குழந்தை தொட்டில், கல்உரல், அம்மி,மாங்கல்யம், உணவு ஆகியவற்றை நடைபெற்ற மகாயாக சாலையில் செலுத்தி வழிபாடு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது, பின்னர் 42 அடி உயரம் கொண்ட வெட்காளியம்மனுக்கு பல பாலாபிஷேகம் மற்றும் எலுமிச்சைமாலை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  


ஆனி மாத இருமுடி விழாவிற்கு வருட வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், இன்று 2வது கட்டமாக விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முதற்கட்டமாக சுமார் 1000-க்கும் மேற்பட்ட விரதம் இருந்து காப்பு கட்டி இருமுடி கட்டி வந்த பக்தர்கள் பம்பை வாத்தியத்துடன்  தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தவெகவினர்!

  • Share on

Trending News