முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2,500 கிலோ அரிசி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தவெகவினர்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழக முதல்வரும் த.வெ.க. தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செண்பகக்கனி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தொழிலதிபர் டிரிபிள்சி கண்ணன், மற்றும் கனகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணைச் செயலாளரும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளருமான பொன் காசிராம் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர், ஏழை எளிய பொதுமக்களுக்கு மொத்தம் 2,500 கிலோ அரிசி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசிப் பைகள் வழங்கப்பட்டதுடன், 200 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெறும் விழாவாக மட்டுமின்றி, பொதுமக்களுக்கு பயனளிக்கும் சேவை நிகழ்வாக மாற்றிய புதூர் மேற்கு ஒன்றிய த.வெ.க. நிர்வாகிகளின் செயல்பாடு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.



உங்கள் கருத்தை பதிவிடுக