Breaking News

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்...!

  • Share on

விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்‌.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், புதூர் - பரளச்சி செல்லும் சாலையில் பார் வசதியுடன் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை பொது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று இந்த அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு வந்த புதூர் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் காவல்துறையினரிடம் இந்த அரசு மதுபானக் கடையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து உடனடியாக கடையை மூட வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்...!

  • Share on