Breaking News

ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்...!

  • Share on

ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி விளாத்திகுளம் வட்டார கிளையின் ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும், 25 ஆண்டுகள் பணியை முடித்துள்ள ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா என முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரிய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை; தமிழக ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு எந்தவித ஊழல் இன்றி வெளிப்படையாகவும், நேர்மையான முறையில் நடத்திட த.வெ.க அரசுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி கடந்த ஆட்சியாளர்களிடம் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பேட்டி!

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்...!

  • Share on