Breaking News

யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பேட்டி!

  • Share on

கூட்டுறவுத் துறையில்  யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பேட்டி!




தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள  சிந்தலக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட கடன்கள்,  வைப்புத்தொகை, வரவு செலவு உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து எட்டயபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 4 மகளிர் குழுவை சேர்ந்த 48 பெண்களுக்கு 48 லட்சம் கடன்  வழங்கினார். 



இதனை தொடர்ந்து அமைச்சர் காந்திராஜ்  செய்தியாளார்களிடம் பேசினார்.




கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பண்ணை சாரா கடன்களுக்கான அபராத வட்டி கடந்த திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அது தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் தொடருமா? என்ற கேள்விக்கு 



தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலின் படி கூட்டுறவுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு ள்ளேன். அடுத்து வரும் அறிவிப்புகளில் நீங்கள் கேள்விக்கும் கேள்விக்கெல்லாம் பதில் இருக்கும்  என்றார்.



கடந்த ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்கள் கொடுக்கப்பட்டதிலும், வாராக்கடன்கள் அதிகரிப்பிலும் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு.



முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து கண்டறிய ஒவ்வொரு துறையாக கள ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முத்துலாபுரம் உயர் மட்ட பால இணைப்பு இரும்பு ராடுகள் சேதம், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு!

  • Share on