Breaking News

தாப்பாத்தி இலங்கை தமிழர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர்!

  • Share on

தாப்பாத்தி இலங்கை தமிழர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர்!



குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 80 குடும்பவாசிகள்.


தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் கடந்த திமுக ஆட்சியில் 300 புதிய வீடுகள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது, அவ்வாறு கட்டப்படவுள்ள புதிய வீடுகளுக்கு அப்பகுதியில் போதுமான இட வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் பழைய வீடுகளில் குடியிருந்து வரும் மக்களை குடியிருப்புகளை காலி செய்யக்கோரி ஒப்பந்ததாரர் மிரட்டுவதாகவும், தற்போது 80 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் ஒப்பந்ததாரர் துண்டித்ததாக கூறப்படுகிறது, அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யாவிட்டால்,வசித்து வரும் குடியிருப்புகளை ஜேசிபி வாகனங்களைக்கொண்டு இடித்து விடுவதாக ஒப்பந்ததாரர் மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



இதனை அடுத்து தகவல் அறிந்த எட்டையாபுரம் பகுதி பாரதிய ஜனதா கட்சியினர் முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து, குடியிருப்பு வீடுகளை அகற்றினால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என, ஒப்பந்தக்காரருக்கும் தற்போதைய தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்து இலங்கைத் தமிழர் மக்களுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இணைந்த தமாக நிர்வாகி!

  • Share on