விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை?
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள குருவாடி கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் அஜித்குமார் (20) இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மறி ஆடுகளை கிடையமைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை, எனக்கு பதிலாக மாற்றாலை அனுப்பி வைக்குமாறு தனது தந்தை மலைச்சாமியிடம் செல்போனில் கூறியதாக கூறப்படுகிறது, தனது மலைச்சாமி அஜித்குமாரை மாற்றுவதற்கு மாற்று ஆள் அனுப்பாததால் மனவிரக்தியில் இருந்த அஜித்குமார், கந்தசாமிபுரம் கிராமத்திலிருந்து கட்டைத்தலைவன்பட்டி கிராமத்திற்கும் இடையே காட்டுப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல்நிலைய போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக