கோவில்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் வெள்ளை பாண்டி என்பவர் மகன் அருண்பாண்டியன்(23). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இளம்புவனத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி பைக்கில் வந்துள்ளார். அதேபோன்று சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மகன் சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு ஊருக்கு பைக்கில் திரும்பி உள்ளார். கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரண்டு பைக்குகளும் எதிர்பாராதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவம் இடத்தில் அருண்பாண்டியன், சுப்புராஜ் இருவரும் பரிதாபமாக உயிரி*ழந்தனர்.இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




உங்கள் கருத்தை பதிவிடுக