Breaking News

குடியிறுப்புகளை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது?

  • Share on

மாற்று ஏற்பாடு செய்யமால் குடியிறுப்புகளை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது? கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டஇலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள மக்களுக்கு 126 புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் 300 வீடுகள் அங்கு கட்டப்படவுள்ளன. ஏற்கனவே அங்கு குடியிருந்து வரும் இலங்கை தமிழர் மக்களின் பழைய குடியிறுப்புகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளனர். எனவே தற்போது குடியிறுக்கும் இலங்கை தமிழர் மக்கள் தங்கள் குடியிறுப்புகளை உடனடியாக காலி செய்யும்படி எட்டையாபுரம் தாசில்தார்  சுபா நோட்டிஸ் வழங்கியுள்ளார்.


300 குடும்பங்கள் குடியிருக்கும் நிலையில் 80 குடும்பங்களுக்கு மட்டும் தற்காலிக குடியிறுப்புகள் அமைத்து கொடுத்துள்ளதாகவும், மற்ற குடும்பங்களுக்கு எவ்வித ஏற்பாடும் செய்யமால் குடியிறுப்புகளை காலி செய்ய சொன்னதால் அங்குள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்கள் கூறுகையில் அரசு எங்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதை வரவேற்கிறேன். ஆனால் காலியிடத்தில் வீடுகளை கட்டமால் தற்போது குடியிருக்கும் குடியிறுப்புகளை அகற்றி விட்டு, வீடுகட்ட முயற்சி மேற்க்கொண்டுள்ளனனர். ஆனால் 80 குடும்பங்களுக்கு மட்டும் போதுமான அடிப்படை வசதி  ஏற்படுத்தமால் மாற்று ஏற்பாடாக தகர செட்களை அமைத்து கொடுத்துள்ளனர். 80 குடும்பங்களுக்கு 2 கழிப்பிடங்கள் தான் அமைத்து கொடுத்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்ற குடும்பங்களுக்கு எவ்வித மாற்று ஏற்பாடு செய்யமால் காலி செய்ய சொல்கின்றனர்.திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது.? போதுமான வசதிகளுடன் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, கட்டி பணிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்!

திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது? கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டஇலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்!

  • Share on

Trending News