Breaking News

குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்!

  • Share on

விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக முறையான குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர், மேலும் அக்கிராமத்தில் உள்ள 6 அடி பம்புகள் பழுதான நிலையில் தற்போது வரை இருந்து வருகிறது அந்த அடி பம்புகளை சரி செய்யக்கோரியும் முறையான குடிநீர் வழங்க கோரியும், பலமுறை கிராம பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த  பெண்கள்,ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பல மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கவுண்டன்பட்டி கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கிரமம் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தாப்பாத்தி இலங்கை தமிழர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர்!

  • Share on