தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் உயர் மட்ட பால இணைப்பு இரும்பு ராடுகள் சேதம், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு!
தூத்துக்குடி - மதுரை இடையில் தேசிய நெடுஞ்சாலை கடந்த 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இச்சாலை 144 கிலோ மீட்டர் தூரம் உடையதாகும். இச் சாலை வழியாக தினந்ந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக,இலகுரக வாகனங்கள் பயணிக்கின்றன. தவிர இச்சாலை விசாக பட்டிணம் -தூத்துக்குடி துறைமுக இணைப்பு சாலையாகும். எட்டயபுரத்தையடுத்துள்ள இச்சாலையில் முத்துலாபுரம் ஆற்றுப் பாலத்தின் குறுக்கே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தில் உறுதித் தன்மைக்காக பத்துமீட்டருக்கு ஒன்று வீதம் பதினேழு இரும்பு இணைப்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனையொட்டி சிமென்ட் கான்கிரீட் கலவை போடப்பட்டுள்ளது.
இப்பாலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியுள்ள கடைசி பதினேழாவது இரும்பு ராடை சுற்றி போடப்பட்ட சிமென்ட் கலவை முற்றிலும் பெயர்ந்து பெரும் பள்ளம் ஏற்பட்டு இரும்பு ராடு சேதமடைந்துள்ளது. இப்பாலத்தில் வரும் வாகனங்களின் டயர்களை அடிக்கடி பதம் பார்த்து தினந்தோறும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைவதும் தற்காலிகமாக சரிப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இரவு நேரங்களில் பெரும் விபத்து ஏற்படுகிறது. தவிர இப்பாலம் வழியாக இருக்கண்குடி மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு மாதந்தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த பாலத்தின் இரும்பு ராடை கவனிக்காமல் வரும் வாகனங்கள் திடீரென நிலை தடுமாறி பத்தர்கள் மீது மோதி விடுகிறது. எனவே சேதமடைந்த இரும்பு ராடை சுற்றி நல்ல தரத்துடன் கான்கிரீட் கலவை போட்டு பெரும் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : வரதராஜன் - கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர்.



உங்கள் கருத்தை பதிவிடுக