Breaking News

சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

  • Share on

விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அன்றாட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் மிகவும் துவர்ப்பு மற்றும் உப்பு சுவையில் இருப்பதால் அந்த குடிநீரை பொதுமக்கள் பருக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது, இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் 1- வது வார்டு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர், அப்புகாரை அலட்சியபடுத்தி வந்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


இந்நிலையில் தற்போது வரை முறையான குடிநீர் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சா ட்டி வருகின்றனர், இன்னும் இரண்டு தினங்களில் முறையான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகின்ற திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

MRP விலைக்கு பொருள்களை விற்க மாட்டோம் - விருப்பம் இருந்தா வாங்குங்க - எட்டையாபுரம் அருகே நெடுஞ்சாலை சாலையோர ஹோட்டலில் அடாவடி - வீடியோ வெளியாகி பரபரப்பு!

சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

  • Share on

Trending News