Breaking News

தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு : மாவட்ட வட்டவழங்கல் அலுவலரை "லெப்ட் ரைட்" வாங்கிய எம்.எல்.ஏ!

  • Share on

விளாத்திகுளம் அருகே தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு : மாவட்ட வட்டவழங்கல் அலுவலரை  "லெப்ட் ரைட்" வாங்கிய எம்.எல்.ஏ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி,சின்னவநாயக்கன்பட்டிமனியக்காரன்பட்டி,சின்னையாபுரம், நூத்தலக்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி,நியாயவிலை கடை, சமுதாய நலக்கூடம்,உள்ளிட்ட அரசுகட்டிட திறப்பு விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை திறக்க வந்த போது, கிராமத்தைச்சேர்ந்த மக்கள் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்திற்கு ரேஷன் கடையில் கருப்பு நிறத்திலும்,தூசி துப்பட்டையுமாக  தரமற்ற முறையில் அரிசி இருப்பதாகவும், இது சாப்பாட்டுக்கு உகந்ததல்ல, நியாய விலை கடையில் உள்ள அரிசிகளை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதனைத்தொடர்ந்து நியாய விலைக்கடையில் உள்ள அரிசிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர், நியாய விலை கடையில்  இருந்தவரே செல்போனில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம், சின்னவநாயக்கன்பட்டி கிராம நியாயவிலைக் கடைக்கு “வாயில் வைக்க முடியாத” அளவிற்கு மிகவும் தரமாற்ற முறையில் அரிசி அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விளாத்திகுளம் தொகுதி முழுவதும் இப்படி தரமற்ற அரசியலை நீங்கள் அனுப்புவதாகவும், இந்த அரிசியை  உடனே திரும்ப பெற்று தரமான முறையில் அரிசி வழங்க வேண்டும், இல்லையெனில் நான் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விளாத்திகுளம் தொகுதிக்கு தரமற்ற அரிசி வழங்குவதாக பேசுவேன் என விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் அதிகாரியை “லெப்ட் ரைட்” வாங்கி கடிந்து கொண்டார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்...!

8 வயது உடைய இரண்டு சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 15,000/-விதித்து தீர்ப்பு.

  • Share on

Trending News