விளாத்திகுளம் அருகே 8 வயது உடைய இரண்டு சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 15,000/-விதித்து தீர்ப்பு.
கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த குற்றாலம் மகன் முருகானந்தன் (46/26) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி. பிரீத்தா இன்று (16.06.2026) மேற்படி எதிரி முருகானந்தத்தை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக