MRP விலைக்கு பொருள்களை விற்க மாட்டோம் - விருப்பம் இருந்தா வாங்குங்க - எட்டையாபுரம் அருகே நெடுஞ்சாலை சாலையோர ஹோட்டலில் அடாவடி - வீடியோ வெளியாகி பரபரப்பு!
MRP விலையை விட அதிக விலைக்கு விற்கும் தனியார் ஹோட்டலுக்கு ஆதரவாக அரசு பேருந்துகளை நிறுத்தச்சொன்னது யார்? - நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தையில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை ஹோட்டல் ஆர்யாஸ் என்ற தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது,அந்த வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்துகள் தினந்தோறும் அந்த ஹோட்டலில் பேருந்து நிறுத்தி அரசு பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். ஆனால் அங்கு விற்கப்படும் உணவு பொருட்கள் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அங்குள்ள உணவுப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள MRP விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழந்துள்ளது. சில உணவுப்பொருட்கள் பாக்கெட்களில் MRP விலை கூட குறிப்பிடப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த உணவகத்திற்குச்சென்ற பயணி ஒருவர் MRP விலையை விட பொருட்களுக்கு அதிக விலை கேட்பது குறித்து அங்குள்ள ஊழியரிடம் கேட்டபோது எவ்வித பதிலும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஹோட்டல் நிர்வாகி ஒருவர் எங்களுக்கு அதிக விலைக்கு தான் வருகிறது. MRP யை விட விலை அதிகமாத்தான் கொடுப்போம், விருப்பம் இருந்தால் வாங்கி சாப்பிடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று கூறுகிறார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் அந்த ஹோட்டலில் அரசு பேருந்துகளை நிறுத்த சொன்ன அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி இனிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக