Breaking News

காலை உணவு திட்டத்தில் உணவுக்கு பதில் பிஸ்கட் கொடுத்த விவகாரம் - விளாத்திகுளம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு!

  • Share on

காலை உணவு திட்டத்தில் உணவுக்கு பதில் பிஸ்கட் கொடுத்த விவகாரம் - விளாத்திகுளம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு!


அதிகாரிகள் ஒருபுறம் ஆய்வு செய்து கொண்டிருக்க காலை உணவு திட்டத்தில் கொடுத்த உணவை தனது தங்கைக்கு கொடுத்து அழகு பார்த்த பாசக்கார அண்ணன் !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் எழுந்தது. இதையெடுத்து கோவில்பட்டி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பொறுப்பு செல்வி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த காலை உணவுத் திட்டப் பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேலும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை (Show Cause notice) வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 


புதிய மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, உணவுப் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தேவைக் குறிப்பைச் சுயஉதவிக் குழுவினர் இன்னும் சமர்ப்பிக்காததாலேயே காலை உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.


 இந்த நிலையில் இன்று காலையில் விளாத்திகுளம் ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) சாந்தி, தொடக்ககல்வி கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் பொறுப்பு செல்வி, மகளிர் திட்ட அலுவலர் நாகராஜ் ஆகியோர் இன்று காலையில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை ஆய்வு மேற்கொண்டனர் மேலும் குழந்தைகளுடன் அமர்ந்து உணவும் அருந்தினர். 



அப்போது ஒரு சிறுவன் தனது தங்கைக்கு காலை உணவு திட்டத்தில் கொடுக்கப்பட்ட உணவினை தனது தங்கையை அருகில் உட்கார வைத்து ஊட்டிய விதம் அங்கிருந்து அனைவரையும் கவர்ந்தது. இப்படி பாசம் கொண்ட குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் பிஸ்கட் கொடுத்தார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.



 இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில் இதற்கு முன்பு காலை உணவு திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதாகவும், ஆனால் தற்போது பணியாற்றியவர்கள் அவ்வாறு இல்லை குறைவாக உணவு சமைத்து விட்டு குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கி விடுவதாகவும், சின்ன குழந்தைகள் மெதுவாகத்தான் சாப்பிடும் ஆனால் அவர்களை அவசர அவசரமாக சாப்பிடுங்கள் என்று குழந்தைகளை திட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஆடுகளுக்கு கண்மாயில் தண்ணீர் விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கு அறிவால் வெட்டு!

  • Share on

Trending News