Breaking News

ஆடுகளுக்கு கண்மாயில் தண்ணீர் விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கு அறிவால் வெட்டு!

  • Share on

விளாத்திகுளம் அருகே ஆடுகளுக்கு கண்மாயில் தண்ணீர் விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கு அறிவால் வெட்டு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை மற்றும் அதன் அருகே உள்ள சின்னையாபுரம்  ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே கண்மாய் ஒன்று உள்ளது, இந்த கண்மாயை இரு கிராம மக்களும் சேர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.





 இந்த நிலையில் சின்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரவீன் குமார் (21) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன் (24) ஆகியோர் இருவரும்  ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட சென்ற போது, அப்போது அங்கு இருந்த நூத்துல கரை கிராமத்தை சேர்ந்த சிலர் உங்கள் கிராமம் ஆடுகளுக்கு  இந்தத் கண்மாயில் தண்ணீர் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.




இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து, இரு கிராமங்களை சேர்ந்த பெரியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர்.




இதனை அடுத்து நூத்தலக்கரை கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அறிவாலையை எடுத்து வந்து  பாலமுருகன் மற்றும் பிரவீன்குமாரை அறிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளனர்.



இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கிர மக்கள் உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



இதனை அடுத்து   இரு இளைஞர்களையும் அறிவாளால் வெட்டிய   நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை காடல்குடி காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.



மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, சின்னையாபுரம் கிராமத்தை சேர்ந்த  பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2,500 கிலோ அரிசி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தவெகவினர்!

  • Share on

Trending News