Breaking News

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி!

  • Share on

விளாத்திகுளம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி!


திருச்சியில் எந்த ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அனுமதியில்லை,காவல் நிலையத்தில் போலீசார் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி:அடமானம் வைத்த வீட்டை திருப்ப முடியாமல் தவிக்கும் பெற்றோர்...


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை கிராமத்தைசேர்ந்த சோலை ரெட்டி என்பவரின் மகன் ஹெமேஸ் இவர் youtubeபில் வந்த விளம்பரத்தை நம்பி  திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள சிம்போனிக் ஜாப் கன்சலமெண்ட் என்ற நிறுவனத்தை அணுகி, அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தமிழக வெற்றி கழக நிர்வாகியான  சிம்பு என்ற தமிழ்செல்வத்திடம், தான் DEEE படித்துள்ளேன் தனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார்.


அதற்கு சிம்பு என்ற தமிழ்ச்செல்வன் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு உள்ளது மாதம் சிங்கப்பூர் மதிப்புக்கு மாதம் 1400 டாலர்  சம்பளம் வழங்கப்படும், என்று கூறி GPAY மூலமாகவும், கையில் ரொக்கமாகவும் சேர்த்து சுமார் 7 லட்சத்து 500 ரூபாய் கொடுத்துள்ளனர்.


பின்னர் சிம்பு என்ற தமிழ்செல்வம் மூலம்  கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூர் சென்ற ஹேமஸ்க்கு, சிங்கப்பூரில் தமிழ்ச்செல்வன் கூறிய வேலை இல்லாமல்  மாற்று வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் சிங்கப்பூரில் உள்ள அந்த நிறுவனம்  உங்களுக்கு எங்களிடம் போதிய வேலையும் சம்பளமும் இல்லை அதனால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது, இதுகுறித்து ஹேமேஸ் தமிழ்ச்செல்வனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நீ ஊருக்கு வா உனது மீதமுள்ள தொகையை தருகிறேன் என்று கூறியுள்ளார். 



ஆனால் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே தனது தந்தை சோலை ரெட்டி வீட்டு பத்திரத்தை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து தான் தன்னை வெளிநாடு அனுப்பியதால், சிங்கப்பூரில் இருந்த வாரே மாற்று வேலை ஏற்பாடு செய்து தற்போது வேலை பார்த்து வருகிறார்.



இந்நிலையில் சோலை ரெட்டி தமிழ் செல்வத்திடம், நீங்கள் கூறியது போல் அங்கு எனது மகனுக்கு வேலை இல்லை, எனவே பிடித்தனம் போக மீது உள்ள பணத்தை தருமாறு கேட்டுள்ளார், இதற்கு சிம்பு என்ற தமிழ்ச்செல்வன், உங்களுக்கு பணத்தை எல்லாம் திருப்பித் தர முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக நான் காவல்துறையினரிடம் லஞ்சம் கொடுத்து பிரச்சினையை சரி செய்து விடுவேன், இன்று ஆபாசமாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது.





இதனை அடுத்து சோலை ரெட்டி திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு தபால் மூலம் புகார் கொடுத்துள்ளார், ஆனால் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சோலை ரெட்டி நேராக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தான் கொடுத்த புகார் கொடுத்து கேட்டறிந்துள்ளார், அதற்கு அங்குள்ள காவலர்கள் இது இங்கு வராது தில்லை நகர் செல், அங்கு செல், இங்கு செல்,என்று அலை கழித்ததாகவும்   கடைசியில் தில்லைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும் அந்த விசாரணையில் அங்கிருந்த போலீசார் எங்களிடம் கேட்டால் நீ ஏஜென்சி இடம் பணம் கொடுத்தாய்? திருச்சியில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் எந்த ஏஜென்சியும் முறையாக உரிமம் பெறவில்லை  இன்று காவல் நிலையத்திற்குள் போலீசார் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.




இதுகுறித்து சோலை ரெட்டி கூறுகையில் நாங்கள் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து அந்த வீட்டை கூட திருப்ப முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம்,எனவே தமிழக அரசு தமிழ்ச்செல்வம் இது நடவடிக்கை எடுத்து எங்களின் உரிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனிமாத மகா வேள்வி பூஜை சக்தி மாலை இருமுடி விழா: பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள்!

மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்!

  • Share on

Trending News