Breaking News

3 லாரிகள் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்!

  • Share on

எட்டையாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்!


தூத்துக்குடி மாவட்டம் பல்லாக்குளத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தினேஷ்குமார், தூத்துக்குடியில் இருந்து லாரியில் தாராபுரம் நோக்கி புண்ணாக்கு ஏற்றிச்சென்றார்.


எட்டையாபுரம் அருகே விளாத்திகுளம் விலக்கு பகுதியில், தனியார் காற்றாலை வாகனம் ஒன்று சாலையை கடந்ததால், தினேஷ்குமார் தனது லாரியை மெதுவாக இயக்கியுள்ளார். 


அப்போது பின்னால் கோவையை நோக்கி இயந்திரங்கள் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியும், தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி இரும்பு உருக்கத்திற்குத் தேவையான வெள்ளை மண் ஏற்றிச்சென்ற மற்றொரு கண்டெய்னர் லாரியும் அடுத்தடுத்து புண்ணாக்கு லாரி மீது ஒன்றோடு ஒன்று மோதிய 

இந்த விபத்தில் மூன்று வாகனங்களின் டிரைவர்களும் உடனடியாக கீழே குதித்ததால் காயமின்றி உயிர்தப்பினர். எனினும், லாரி மற்றும் இரண்டு கண்டெய்னர் லாரிகளும் சேதமடைந்தன.


தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.


தகவலறிந்த எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து 24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது !

இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு.

  • Share on

Trending News