Breaking News

இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு.

  • Share on

விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி கண்ணம்மாள் (50) மற்றும் அவரது மகள் ராமலட்சுமி(28), ராமலட்சுமியின் (1) வயது மகன் துருவன் ஆகியோர் கம்மாபட்டி கிராமத்திலிருந்து கீழநம்பியாபுரம் கிராமத்திற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்று கொண்டிருந்தனர்,இருசக்கர வாகனத்தை ராமலட்சுமி ஓட்டிசென்றுள்ளார்.


அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது     கண்ணம்மாளின் சேலை எதிர்பாராத விதமாக  இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியதில் குழந்தையை தூக்கி எறிந்து விட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து கண்ணம்மாளின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

3 லாரிகள் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்!

  • Share on

Trending News