Breaking News

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தாலுகா மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • Share on

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தாலுகா மாநாடு: விளாத்திகுளம் புதிய நிர்வாகிகள் தேர்வு! 


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தாலுகா மாநாடு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மாநாட்டிற்கு தாலுகா தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபுவிராஜ்,  தாலுகா செயலாளர் மலைக்கனி, பொருளாளர் முஜூப்பூர் ரகுமான், மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நடைபெற்ற மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.   தாலுகா தலைவராக முஜிபுர் ரஹ்மான், செயலாளராகமலைக்கனி, பொருளாளராக மகாராஜன், துணைதலைவர்களாக ஆர். ராமலிங்கம், அமிர்தராஜ், பொன்ராஜ் துணைசெயலாளர்களாகபெரியசாமி, சேகர், பத்மாஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1.தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியிவனல் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

      2. பருவமழை குறைவால் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும்.  ‌

     3. பருவமழை குறைவால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பிற்கு முழுமையான பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.

    4. ஒன்றிய அரசின் உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

   5. வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி விவசாயிகள் விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

   6.  விளாத்திகுளம் பேரூராட்சி அம்பாள் நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் விளாத்திகுளம் நீர்வளத்துறை கண்மாயில் கலப்பதன் காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள் மாசுபடுகிறது.  எனவே பேரூராட்சி நிர்வாகம் அம்பாள் நகர் கழிவு நீரை கண்மாயில் கலப்பதை தடுக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மூன்றாவது வாரத்தில் உள்ளாட்சி குளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஆனி மாத சனி மகா பிரதோஷம் : பிரதோஷ ரிஷப வாகனத்தில் அருள்பாளித்த சந்திரசேகரர் உமாமகேஸ்வரி!

  • Share on