உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்: சுனாமி வருகிறதா?
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான கடல் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்த நிலையில் 11-12-2024 புதன்கிழமை அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று பார்த்தபோது அங்கு 18 அடி நீளமும் 2 டன் எடையும் கொண்ட அரிய வகை ராட்சத திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது.
இதனையடுத்தது வனத்துறையினர் கறை ஒதுங்கிய திமிங்கல உடலை ஜேசிபி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு இறந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைத்தனர்.
இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது, ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத்திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை போன்றவற்றாலோ மோதி அடிபட்டு இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டு பாம்பன் தெற்கு கடற்கரையில் ஒதுங்கியதா என்பது குறித்து உடற்குறு ஆய்வு முடிவில் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்த ராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கடற்கரையில் திரண்டனர்.
உயிரிழந்த திமிங்கலம் கப்பல் அல்லது பாறையில் மோதி உயிரிழந்ததா அல்லது, தற்போது கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமா அல்லது கடலில் ஏற்பட்டுள்ள ராட்சத அலை காரணமாக இயற்கை உயிரினங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?
என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்...



உங்கள் கருத்தை பதிவிடுக