சாயல்குடியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கைபந்தயம் இலக்கை நோக்கி சீரி பாய்ந்து சென்ற காளைகள்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய திமுக கழகம் சார்பில் மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது,திமுக மாவட்ட அவை தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமையில் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குலாம் முகைதீன் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமர், கடலாடி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,விருதுநகர், மதுரை,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முப்பதுக்கு மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசுகள் திமுக விழா கமிட்டி சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து சென்றனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக