மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ ராட்சத ஆமை: மீண்டும் ஆமையை உயிருடன் கடலுக்குள் விட்ட மீனவர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை-சோழியக்குடி கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்களான ராமுகன்னு, சிவபாலன்,சிங்கார செல்வம்,மனோகரன்,ஜெய்கணேஷ் ஆகியோர் விசைப்படகில் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வலையில் அதிக எடை கொண்ட மீன் எதோ மாட்டிக்கொண்டு உள்ளது என்று மீனவர்கள் வளையை மிகக் கடினத்துடன் இழுத்து படகில் விரித்து பார்த்தபோது, வலையில் மீன் மாட்டவில்லை, 80 முதல் 100 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை ஒன்று மாட்டியது தெரிய வந்தது, இதனை அடுத்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்த பின், அந்த ராட்சத ஆமையை மீண்டும் கடலுக்குள் உயிருடன் விட்டனர். கடல் ஆமையை உயிருடன் விட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதேபோல் கடல் ஆமையை உயிருடன் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக