முதுகுளத்தூர் பகுதியில் தொடர் கனமழையில் ஆட்டம் போட்டு குளித்து மகிழ்ந்த கட்டிட தொழிலாளி!
தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது, இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பெருநாழி, முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், சாயல்குடி, கீரனூர், சித்திரங்குடி, ஏனாதி உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னல் சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. தற்போது தமிழக முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில்,முதுகுளத்தூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் போது கட்டிடத் தொழிலாளி ஒருவர் கனமழையின் பொருட்படுத்தாமல் மழையில் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டும், தரையில் நீச்சல் அடித்தும், துள்ளி குதித்து, தரையில் உருண்ட வாரும் குளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக