Breaking News

சாயல்குடி காமாட்சி அம்மனுக்கு 108 பாலாபிஷேகம்!

  • Share on

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் வைகாசி உற்சவ கோவில் கொடை விழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 8ம் நாளாக பக்தர்கள் 108 பால்குடங்களை சாயல்குடி காவல் நிலையம் அருகே உள்ள மங்கள விநாயகர் கோவிலில் இருந்து  வானவேடிக்கை,மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சுற்றி வலம் வந்தனர், இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு எடுத்துவரப்பட்ட 108 பால்குடங்கள்  உள்ள பால்,சந்தனம், மஞ்சள்,இளநீர், திருநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரமே நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்த்து கணபதி ஹோமம் பூர்ணாகுதி தீபாதாரண நடைபெற்றது, இதில் சாயல்குடி மற்றும் கடலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கொட்டும் மழையில் " தகிட தகிட" ஆட்டம் போட்ட கட்டிட தொழிலாளி!

  • Share on