விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் 213-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முரளி கண்ணன், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) பாலமுருகன் என பலர் கலந்து கொண்டு மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர். இந்த பயிற்சி வகுப்பில் தேர்தலில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு மண்டல அலுவலர்களின் தேர்தல் பணிகள் குறித்தான சந்தேகங்களுக்கு விளக்கம் கூறப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக