Breaking News

பாஜகவை விளாசிய கனிமொழி எம்.பி.!

  • Share on

"லடாக்கில் ஆயிரக்கணக்கான கி.மீ சீனா ஆக்கிரமித்துள்ளது...ஆனால் இதையெல்லாம் எதிர்த்து கேட்கக்கூடிய தைரியம் பாஜக & அதிமுக-விற்கு கிடையாது.... இந்த நாட்டையே விட்டுக்கொடுக்கக்கூடிய, நாட்டுப்பற்றே இல்லாத பாஜகவிற்கு இந்த தேர்தலில் நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" - பாஜகவை விளாசிய கனிமொழி எம்.பி.!



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி இன்று விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழிக்காக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிவஞானபுரம் கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி;



லடாக்கில் ஆயிரக்கணக்கான கி.மீ சீனா ஆக்கிரமித்துள்ளது...ஆனால் இதையெல்லாம் எதிர்த்து கேட்கக்கூடிய தைரியம் பாஜக & அதிமுக-விற்கு கிடையாது.... இந்த நாட்டையே விட்டுக்கொடுக்கக்கூடிய, நாட்டுப்பற்றே இல்லாத பாஜகவிற்கு இந்த தேர்தலில் நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்



இலவச பேருந்து பயணத் திட்டத்தில் பெரும்பான்மையாக இந்து பெண்களுக்கு பயன் கிடைக்கிறது.



விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவஞானபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்று பொய்யாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்று அரசாணை காண்பித்து விமர்சனம் செய்தார்.



இந்த நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற, நாட்டை காப்பாற்ற ஏனென்றால் சீன எல்லையில் சீனா உள்ளே வந்துகொண்டே இருக்கிறது... நம்முடைய நிலத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்... நான் பெரிய வீரன் என்று சொல்கின்ற மோடி வாயே திறக்கவில்லை


இதையடுத்து இறுதியாக கனிமொழி பிரச்சாரத்தை முடித்துவிட்டு கிளம்பியபோது அருகில் இருந்த இளைஞர்கள் கனிமொழியை நிறுத்தி தங்களது கிராமத்தில் துணை சுகாதார நிலையம், கால்வாய் வசதி, சாலை வசதி விளையாட்டு மைதானம் என எதுவுமே முறையாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்... இதைக்கேட்ட கனிமொழி தேர்தல் முடிந்தவுடன் நான் வந்து பார்க்கிறேன் உன்னை இளைஞர்களிடம் கூறிச் சென்றார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஆட்சியர் தலைமையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி!

திமுகவிற்கு பாஜக மறைமுகமாக ஆதரவு?

  • Share on

Trending News