விளாத்திகுளம் அருகே பனைத்தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் : கொளுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் தீவிர பிரச்சாரம்!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் இன்று விளாத்திகுளம் பகுதிகளில் கட்சியினர்களுடன் சேர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள பனை தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று அங்கிருந்த பனைத் தொழிலாளர்களிடம், "உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்..." என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் சீமை சாராயத்திற்கு முழு தடை. பனம் பால் (கள்) மற்றும் தென்னம்பால் (கள்) உள்ளிட்டவற்றை உணவு பொருளாக அறிவிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, குளத்தூர், பனையூர், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வாகனப்பரப்புரையில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியின் சின்னமான மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் மற்றும் கட்சியினர் வாக்குகளை சேகரித்தனர்.இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாண்டி, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேஷ்குமார்,பாலாஜி ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் செய்யது, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக