தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி, 2-வது நாளாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமலாபுரம், கூத்தலூரணி, நமச்சிவாயபுரம், சிவஞானபுரம், எப்போதும் வென்றான், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பொதுமக்களிடம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் உட்பட கட்சியினர் கமலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காவடி சிந்து கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பொதுமக்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும், திமுக அமைச்சர்கள் மற்றும் திமுகவை விமர்சனம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், காந்தி (எ) காமாட்சி, ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், அம்மா இலக்கிய அணி இணைச் செயலாளர் வரதராஜ பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் சீதாலட்சுமி, சரஸ்வதி, கவிதா ஒன்றிய அதிமுக மகளிரணி சாந்தி, பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக