மக்களவை தேர்தல்
நெருங்கும் இத்தருணத்தில் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்
பொதுக்கூட்டங்கள், வாகனப்பரப்புரை,
தேர்தல் பிரச்சாரங்கள் என
பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி
தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து
இன்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
குளத்தூர், வைப்பார்,
சிப்பிக்குளம், இ. வேலாயுதபுரம் இந்த பல்வேறு பகுதிகளில்
தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய
கட்டபொம்மன் நினைவாலயத்தில் கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
வணங்கினார். இதே தொடர்ந்து அங்கே இருந்த பொதுமக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்
கடம்பூர் ராஜூ,
"யாரிடம்
கேட்கிறாய் வரி... எதற்கு கொடுக்க வேண்டும் வரி..." என்ற கட்டபொம்மனின் வீர
வசனத்தை பேசி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து பேசிய
கடம்பூர் ராஜு "ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு" தமிழகத்தில்
அனைத்து அணைகளிலும் தண்ணீர் திறந்து விடுவார், பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறிவிட்டு
தற்போது, சாராய ஆறு ஓடுகிறது ரத்த ஆறு ஓடுகிறது, வன்முறை,கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
கஞ்சா போதை பொருள்
கடத்தல் உள்ளிட்டவை சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருட்கள் கடத்துவது
யார் என்றால் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஜாபர் சாதிக், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆகியோருடன் புகைப்படம் எடுத்து இதுவரை 2000 கோடி போதைப் பொருட்கள் கடத்தி உள்ளனர். இன்னொரு அமைச்சர்
அரசு கஜானாவிற்கு போகக் கூடிய பணத்தை தவறாக திருப்பி முப்பதாயிரம் கோடி ரூபாய்
பணத்தை கொள்ளை அடித்து தற்போது செந்தில் பாலாஜி
ஜெயிலில் உள்ளார். "கூடா நட்பு கேடாய் முடியும்" திமுகவினரை
நம்பி போனால் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்" இவர்களை நம்பி போனால் ஜெயிலுக்கு தான் போக
வேண்டும் என்பதற்கு உதாரணம் செந்தில் பாலாஜி தான், இன்னும் நிறைய
அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாக வரிசையில் உள்ளனர், தற்போது தேர்தல் வந்ததால் அமைச்சர்களின் கைது தள்ளிப் போகி உள்ளது,
தேர்தல் முடிந்தவுடன் 10,15 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவது உறுதி.
அதிமுக ஆட்சியில்
விலைவாசி கட்டுக்குள் இருந்தது, தற்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், அரிசி,
காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது, நாப்பது ரூபாய்க்கு விற்ற நல்ல அரிசி தற்போது 80
ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயருக்கு
எதிராக குரல் கொடுத்தவர் கட்டபொம்மன் என்றால் பொதுமக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி ,மின் கட்டண உயர்வு பால் விலை என அனைத்தும்
உயர்த்தப்பட்டுள்ளதாக கடம்பூர் ராஜு பேசினார். இந்நிகழ்வில்
முன்னாள் அமைச்சர் சீனா தானா செல்ல பாண்டியன், விளாத்திகுளம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள்
மகேஷ், காந்தி என்ற காமாட்சி, குளத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகபெருமாள் மற்றும் கூட்டணி கட்சி
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக