Breaking News

LAST MINUTE வரை தேர்தல் பிரச்சாரம் செய்த கனிமொழி!

  • Share on

10 மணி ஆகிவிட்டது.... என கனிமொழிக்கு ALERT கொடுத்த அமைச்சர் கீதாஜீவன் : LAST MINUTE வரை தேர்தல் பிரச்சாரம் செய்த கனிமொழி!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர், வைப்பார், சூரங்குடி, அரியநாயகிபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி,  புதூர், சிவலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழிக்காக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிவலார்பட்டி கிராமத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இரவு நேரம் 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்த போதும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். இதனால் வாகனத்தினுள் அமர்ந்திருந்த அமைச்சர் கீதாஜீவன், நேரம் 10 மணி ஆகிவிட்டது...என்று திமுக வேட்பாளர் கனிமொழியிடம் ALERT செய்து பிரச்சாரத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து உடனடியாக தனது கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, "இதுக்கு மேல நேரம் இல்ல...10 மணி ஆகிவிட்டது" எனக் கூறி பிரச்சாரத்தை நிறைவு செய்து புறப்பட்டார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீரபாண்டிய கட்டபெம்மனை வணங்கி... வீர வசனம் பேசி வாக்கு சேகரித்த கடம்பூர் ராஜூ!

  • Share on

Trending News