MLA மார்க்கண்டேயன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக மாநிலத் துணை தலைவர் சசிகலா புஷ்பா முதல்வருக்கு எச்சரிக்கை!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் பாரதிய ஜனதா சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசியதாக கூறி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை ஒருமையில் பேசி சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை விமர்சித்து பேசினார். அதுமட்டுமன்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியில் புதிதாக சேர்ந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை திமுக அரசு எதிர்ப்பதால், மக்கள் மீது அவர்கள் எந்த அளவிற்கு அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது என கூறினார். அதே போல், பாஜக ஒரு கட்டமைப்பின் கீழ் இயங்கக்கூடிய கட்சி..."தலை இருக்கும் போது வாழ ஆடக்கூடாது.. ஆனால் தலை இருக்கும் போது வால் ஆடினால் அது சரியில்லாத நிர்வாகம் என அர்த்தம்" என்று அதிமுகவினரை மறைமுகமாக சாடினார்... அதுமட்டுமன்றி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் - பாஜக-விற்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, "ஒருமையில் பேசி... கேடுகெட்ட தருதலை, முட்டாள், கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை" என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து அவதூறாக பேசியிருப்பது தற்போது மீண்டும் திமுக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
(கடந்த 2 நாட்களுக்கு முன்பு விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்ய வைத்தனர்... இந்த நிலையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரையே பாஜக நிர்வாகி அவதூறாக பேசியிருப்பது அரசியல் பார்வையாளர்களை விளாத்திகுளம் தொகுதியை உற்றுநோக்கி பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.)



உங்கள் கருத்தை பதிவிடுக