எட்டையாபுரத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு விழா!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று எட்டையாபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு , முதற்கட்டமாக வாடகை கட்டிடத்தில் இயங்க அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி கலந்து கொண்டு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்,
எட்டையாபுரம் நீதிபதியாக ஹரி ராமகிருஷ்ணன், பொறுப்பேற்றுக்கொண்டார், இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா,கோவில்பட்டி சார்பு நீதிபதி மாரிகாளை மாவட்ட உரிமைகள் நீதிபதி கருப்பசாமி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் மணிமேகலா, நீதிபதிகள் ஞான ஜெரிதாபிளவர், தரணிதரன், சுபாஷினி, எட்டையாபுரம் தாசில்தார் சுபா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக