விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள்!: ஒரு மாணவிக்கு மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் முறையான கல்வி இல்லை என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் .T.N.D.T.A எனும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது,இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவி மட்டும் இருப்பதாகவும், மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவ்வாறு உள்ள ஆசிரியர்கள் இருவரும் மனைவிக்கு முறையாக கல்வி கற்பிப்பது இல்லை என்று அக்கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அந்தப்பள்ளிக்கு சென்று செய்தி செய்தி சேகரிக்க சென்றபோது, பள்ளியில் இருந்த ஒரே மாணவி பள்ளியின் நடுப்பகுதியில் அமைதியாக அமர்ந்திருந்தார், பள்ளியின் தலைமையாசிரியர் மேரி பள்ளியின் தெற்கு பகுதியிலும் ஆசிரியர் ஜீவா பள்ளியின் வடக்கு பகுதியிலும், அமைதியாக அமந்திருந்தனர், இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் உள்ளே செய்தியாளர்கள் வராதீர்கள்,எதுவாக இருந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசிக்கொள்ளுங்கள், என்று தலைமையாசிரியர் மேரி செய்தியாளர்களிடம் கூறினார்,அதற்கு செய்தியாளர்களோ தங்களுக்கு பள்ளி நிர்வாகம் ஊதியம் தருகிறதா? இல்ல அரசு தருகிறதா? என்று கேட்டவுடன், தலைமை ஆசிரியர் மேரியும் ஆசிரியர் ஜீவாவும், செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து பள்ளி அறையில் இருந்து இரு ஆசிரியர்களும் வெளியே சென்றனர்.
அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிக்கு மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஆசிரியர் ஜீவாவிற்கு மாசம் 80 ஆயிரம் சம்பளமும், அந்தப்பள்ளியில் உள்ள சமையல் உதவியாளர் ஒருவருக்கு 7000 சம்பளமும், மேலும் அந்தப்பள்ளிக்கு மின்சார சேவை,காலை உணவுதிட்டம், மதியஉணவு திட்டம்,சமையல் எரிவாயு,LED TV உள்ளிட்ட அரசு சார்பில் பல்வேறு உதவிகள் பள்ளிக்கு வழங்கப்பட்டாலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு வந்தோம்,வீட்டுக்கு சென்றோம் என்ற நிலையில் மாணவிகளுக்கு முறையாக பாடம் கற்பிப்பதே இல்லை என்றும் பள்ளியில் உள்ள கரும்பலகையில் உள்ள தேதியை மாற்றக்கூட அவர்கள் இருவருக்கும் நேரமில்லை என்றும் புதுப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு இந்த பள்ளியில் 5 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார், எனவே அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அலுவலர்களும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக