விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீரமுத்தம்மாள் தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாதலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமுத்தம்மாள்தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதற்கு முன்னதாக காலை 6 மணி அளவில் மகாஸ்ங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யசுக்தி மகாகணபதி ஹோமம், கோபூஜை,வேதிகாச்சனை விசேஷ ஹோமம் நாடிசந்தனம்,பூர்ணாகுதி, தீபாதாரணைய தொடர்ந்து கடம் புறப்பாடுடன் கோவில் விமானத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து மகா தீபாதாரணை நடைபெற்றது.
பின்னர் அருள்மிகு ஸ்ரீ வீரமுத்தம்மாள் சுவாமிக்கும் கோவில் வளாகத்தில் உள்ள இதர பரிவார தெய்வங்களுக்கும் பால்,தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் புனித நீர்தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.



உங்கள் கருத்தை பதிவிடுக