கணவர் வீட்டின்வாசலில் படுத்து இருந்து நிலையில் மனைவி உள்ளே படுகொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டாவடமலாபுரம் கிராமத்தை சேர்ந்த திருக்கண்ணன் கலாவதி (62) இவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS)சத்துணவு மேற்பார்வையாளராக இருந்து தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்று வீட்டிலிருந்து வந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு ராகேஷ்,சதீஷ்,சுலோச்சனா ஆகிய மூன்று பேர் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் இரவில் காலாபதி வீட்டில் உள்ளே படுத்து இருந்தால் அவரது கணவன் திருக்கண்ணன் வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திருகண்ணன் விட்டின் உள்ளே சென்று பார்த்த போது கலாவதி கழுத்துப்பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு பல வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் கலாவதி உயிரிழந்து கிடந்துள்ளார். கலாவதிகழுத்தில் அணிந்திருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.
இதனை அடுத்த தகவல் அறிந்த கடல்குடி காவல் நிலைய போலீசார் கொலை நடந்த இடத்திற்கு வந்து கலாவதியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர், தடயவியல் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷே குப்தா கொலை நடந்த இடத்தினையும்,கிராம மக்களிடமும் தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது மகன்கள் ஆன ராகேஷ்சதீஸ்,சுலோக்சனா ஆகிய மூன்று பேர் வந்தால் மட்டுமே கலாபதியின் உடலை வீட்டில் இருந்து எடுக்க விடுவோம் என்று உறவினர்கள் காவல்துறையினிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக