Breaking News

ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு !

  • Share on

விளாத்திகுளம் அருகே   தேய்பிறை பஞ்சமியை" முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு - பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருகை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N.சுப்பையாபுரம் (எ) நரிப்பட்டி கிராமத்தில் புதிதாக பிரதிஷி செய்யப்பட்டுள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால், தயிர், நெய்,தேன் மஞ்சள்,இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரணை தீபாதாரணை,ஷோடச, உபச்சாரம், நட்சத்திரதீபம், பஞ்சமுக தீபம்,பஞ்சமுகதீபம்,தீபாதாரணை அபிஷேகம் நடைபெற்றது.

வாராஹி அம்மனுக்கு, சிவகாசி, விருதுநகர், மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனுக்கு தேங்காய் அரிசியால் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

மேலும், இந்த சிறப்பு வாய்ந்த "நரிப்பட்டி வராகி அம்மன் கோவிலில்" ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி தினங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் "ரப்பர் பந்து"அடித்ததில் சேதம்!

  • Share on