தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்!
தமிழகம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாமுநயினார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர் கருணாநிதியின் தீவிர முரட்டு பக்தனான ராஜாக்கண்ணு என்பவர்,பல ஆண்டுகளாக திமுக பிரமுகராகவும், தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார், இவர் திமுக மற்றும் கலைஞர் கருணாநிதியின் மீது கொன்ற பற்றின் காரணமாக, கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டும், ராஜாக்கண்ணு மகள் குருப்பிரியா -வின் பூ புனித நீராட்டு விழாவை முன்னிட்டு தனது சொந்த கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தினார்.
பூஞ்சிட்டு, தேன்சிட்டு, என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி,மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியானது மாமுநயினார்புரம் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது.
நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயம் குறுகலான சாலை என்றாலும், சாரதிகள் மற்றும் பின்சாரதிகள் மாட்டு வண்டிகளை மிகவும் நேர்த்தியாக வெற்றி இலக்கை நோக்கி மாட்டு வண்டிகளை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், தமிழக ஏர் உழவன் விவசாய சங்கத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக