விளாத்திகுளம் அருகே டீ, வடை கொடுத்து 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள என்.வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நிறை பாண்டி என்பவர் மகன் ராஜேஷ்(27). இவர் தந்தை நிறை பாண்டி அதே பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய மகன் ராஜேஷ், டீக்கடையில் தந்தை இல்லாத நேரத்தில் ராஜேஷ் அதே பகுதியில் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் 14 வயதுடைய சிறுவனுக்கு அடிக்கடி டீ, வடை கொடுத்து அதற்கு பணம் வாங்காமல் பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை செய்து வந்துள்ளான். இதே போல காமக்கொடூரன் ராஜேஷ் தொடர்ந்து பல நாட்களாக பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து வந்துள்ளான்.
இதுபற்றி அறிந்த அக்கிராம சிறுவர்கள் சிலர் கிண்டல் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 14 வயது சிறுவன் அழுது கொண்டே தனது பெற்றோரிடம் இதைப் பற்றி தெரிவித்துள்ளான். தகவலறிந்த சிறுவனின் பெற்றோர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் விசாரணையில், கொடூர இளைஞர் ராஜேஷ், 9-ம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.



உங்கள் கருத்தை பதிவிடுக