Breaking News

அரசு வாகனங்கள் இன்சூரன்ஸ் கிடையாது...பாலிமர் வேல்ராஜ் அதிரடி பேச்சு!

  • Share on

அரசு வாகனங்கள் அனைத்திற்கும் இன்சூரன்ஸ் கிடையாது...பாலிமர் செய்தி ஆசிரியர் வேல்ராஜ் அதிரடி பேச்சு!



இந்தியாவிலேயே முதல்முறையாக லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை  பாதுகாக்கும் வகையில் புதிய செயலி எட்டையாபுரத்தில் அறிமுகம்!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஓட்டுநர் மற்றும் லாரியும் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாள சரி செய்யவும், விபத்து காப்பீடு, வாகன விபத்து காப்பீடு, வாகனம் பழுதாகி நின்றால் சரி செய்ய மெக்கானிகை அழைக்க என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு " E-VAHAN SEVAI MOBILE APP" இன்னும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது, இந்த அறிமுக கூட்டத்திற்கு கர்நாடகா, ஆந்திர, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட  இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து  சுமார் 1000த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே செயலியில் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த செயலி இந்திய அரசால் இன்று அங்கீகரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கு  இந்த செயலியில்  ஆதார் கார்டு  மூலமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற்றுத் தர வழிவகை செய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் வெளி மாநிலங்களில் வாகன பழுது பார்க்க   மொழி தெரியாமல் தவிக்கும் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் 33 மாநிலங்களிலும், 33 மொழி பேசுபவர்களை ஏற்பாடு செய்து  எளிய முறையில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலிமர்  செய்தி ஆசிரியர் திரு.வேல்ராஜ் பேசிய போது, லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் அண்டை மாநிலங்களில் படும் இன்னல்களை விலக்கி  கூறினார்மேலும் அவர் பேசுகையில் அரசு  துறை சார்ந்த அனைத்து வாகனங்களுக்கும்  காப்பீடு மற்றும் வரி கிடையாது என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தான் படித்த பள்ளிக்கு ரூ,10 லட்சம் நன்கொடை வழங்கிய மலேசியாவாழ் முன்னாள் மாணவர்:சமூக மத ஒற்றுமையுடன் வரவேற்பு அளித்த கிராம மக்கள்!

இறந்தவரை தோளில் சுமந்து கொண்டு மயானத்திற்குச் செல்லும் கிராமவாசிகள்!

  • Share on