Breaking News

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்!

  • Share on

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்!


வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவனநாதசுவாமி திருக்கோவிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.


திருக்கோவில் அர்ச்சகர் ஹரி பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 56-ஆவது மாத அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


எம்.கே.எஸ். கேட்டரிங் உரிமையாளர் கருப்பசாமி வரவேற்புரை ஆற்றினார். லட்சுமி டெக்கரேஷன் உரிமையாளரும் நகர்மன்ற உறுப்பினருமான சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், கழுகுமலை மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் வழக்கறிஞர் காளிராஜ் மற்றும் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் அருண் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மாடசாமி, கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மந்திர சூடாமணி, நாகஜோதி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் மேலாளர் பாலமுருகன் மற்றும் மாலினி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஏழாயிரம்பண்ணை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், எஸ்.கே. அசோக், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜா, எஸ்.பி. பாண்டியன், தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, குமாரசாமி, அன்பழகன், ஜெயக்குமார், கழுகுமலை விக்னேஷ், மகேந்திரன் மற்றும் அறக்கட்டளையின் வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருப்பசாமி மணி பிள்ளை குடும்பத்தினர் செய்திருந்தனர். நிறைவாக மாலைமலர் நிருபர் தங்கராஜ் நன்றி கூறினார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

அகில இந்திய ஹாக்கி போட்டி - இந்திய கப்பற்படை அணி சாம்பியன்!

மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !

  • Share on