Breaking News

மினி லோடு ஆட்டோ மீது பைக் மோதல் - ஒருவர் உயிரிழப்பு.

  • Share on

எட்டையாபுரம் அருகே மினி லோடு ஆட்டோ மீது பைக் மோதல் - ஒருவர் உயிரிழப்பு.




திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த தனசேகர்(27), அவரது உறவினர் இளங்கோ (21) இருவரும் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி உள்ளனர். அதேபோன்று அவர்கள் பைக்கிற்கு முன்பு திருச்செந்தூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மினி லோடு ஆட்டோ ஒன்று சென்றுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி லோடு ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனசேகர் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


அவருடன் வந்த  இளங்கோ காயம் ஏற்பட்டு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லோடு ஆட்டோ டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு?

  • Share on