எட்டையாபுரம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு?
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கான்சாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மகன் ஜெயராகவன் (33), இவர் நேற்று இரவு கிணற்றில் குளிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தனது மகன் வீட்டிற்கு திரும்பாததால், அவரது தாயார் ஜோதிமணி பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் ஜெயராகவன் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயராகவன் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக