விளாத்திகுளம் அருகே வீட்டின் கட்டிலில் பதுக்கி வைத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த திமுக நிர்வாகி கைது!
28 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் பறிமுதல்.
தமிழக முழுவதும் புதிய ஆட்சி அமைந்த உடன் காவல்துறையினர் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுப்பாட்டில்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களை அதிரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் முத்தையா என்பவரின் மகன் அதிவீரன்(68) என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில், மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அதிவீரன் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் வீட்டின் மெத்தைக்கு அடியில் என பல்வேறு பகுதிகளில் சுமார் 28 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது, இதனை அடுத்து அதிவீரனை கைது செய்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் புகையிலைப் பொருட்களை விற்று வைத்திருந்த சுமார் 18000 ரூபாய் பணத்தையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக