முதுகுளத்தூர் அருகே தான் படித்த பள்ளிக்கு ரூ,10 லட்சம் நன்கொடை வழங்கிய மலேசியாவாழ் முன்னாள் மாணவர்:சமூக மத ஒற்றுமையுடன் வரவேற்பு அளித்த கிராம மக்கள்!
ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே உள்ள மாவட்டம் மீமிசல் கிராமத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், மீமிசல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மரத்தடியில் கல்வி பயிலும் நிலை இருந்து வந்தது, மழைக்காலங்களில் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர், இதனை அடுத்து அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் முகமது ரஃபி சேட் மலேசியா நாட்டில் தொழில் இருந்து வருகிறார். இதனை அடுத்து மீமிசல் கிராம மக்கள் மலேசியாவில் இருக்கும் மீமிசல் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரஃபி சேட் க்கு பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து மலேசியாவாழ் தமிழரும், மீமிசல் பள்ளியிள் 1990ம் ஆண்டு 5ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவரும், மலேசியா தொழில் அதிருமான முகமது ரஃபி சேட் பள்ளி வகுப்பறை கட்டிடப் பணிகளை துவங்குங்கள் அதற்கான பங்களிப்பை நான் நான் உறுதியாக தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இதனை அடுத்து மீமிசல் கிராம மக்கள், அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஒரு பங்கும்,மீதமுள்ள தொகை ரூபாய் 10 லச்சம் பணத்தை முகமது ரஃபி சேட் நன்கொடையாக வழங்கி,ரூபாய் 19 லட்சத்தில் புதிதாக வகுப்பறை கட்டி முடிக்கப்பட்டு, வகுப்பறையின் திறப்பு விழாவிற்கு மலேசியாவில் இருக்கும் முகமது ரஃபி சேட் க்கு அழைப்பு விடுத்தனர்.
ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று மலேசியாவில் இருந்து மீமிசல் கிராமத்திற்கு வந்த முகமது ரஃபி சேட் க்கு கிராம மக்கள் தங்களின் அன்றாட பணிகளை ஒத்திவைத்து,கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முகமது ரஃபி சேட்க்கு கும்பம் மரியாதை, ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து புதிய வகுப்பறை கட்டிடத்தை திறக்க வைத்து உற்சாகமாக கொண்டாடினர். அதேபோல் மீமிசல் கிராமம் தமிழகத்திலேயே மது மற்றும் புகையிலை தடை விதிக்கப்பட்ட கிராமம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




உங்கள் கருத்தை பதிவிடுக