சாத்தூர் அருகே வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு துலுக்கன்குறிச்சி ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பால்குடம் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோவிலை பலம் வந்து, தாங்கள் எடுத்து வந்த பாலை ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதற்கு முன்னதாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்




உங்கள் கருத்தை பதிவிடுக